நடிகர் அஜீத் குமாரின் வீடு சென்னை திருவான்மியூர் சீ வேர்டு சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 2 மர்ம வாலிபர்கள் கேட் கதவை தட்டி நாங்கள் தலய பார்க்க வேண்டும், அவரை சந்தித்து பேசவே வந்தோம் என்று கூச்சல் போட்டு கலாட்டா செய்துள்ளனர். அதற்கு வீட்டு காவலாளி அஜீத் வீட்டில் இல்லை பகல் நேரத்தில் வந்து சந்தியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த வாலிபர்களோ குடிபோதையில் இருந்ததால் தாங்கள் கூறியதையே திரும்பத் திரும்ப கூறியுள்ளனர். அந்நேரம் வெளியே சென்ற அஜீத் காரில் வீடு திரும்பினார். அவரை பார்த்த வாலிபர்கள் குஷியாகி தல வந்துவிட்டார் என்று கூறிக் கொண்டே காருக்குப் பின்னால் வீட்டுக்குள் நுழைந்தனர். இதை பார்த்த காவலாளி அந்த இருவரையும் தடுத்து நிறுத்தினார். அஜீத் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
இந்நிலையில் வாலிபர்களின் அட்டகாசம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் போலீசார் அஜீத் வீட்டுக்கு வந்து அந்த 2 பேரையும் பிடித்து திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் தாங்கள் இருவரும் அஜீத்தின் தீவிர ரசிகர்கள் என்றும், அஜீத்தை பார்க்கும் ஆசையில் வந்ததாகவும் தெரிவித்தனர்.
ரகளை வாலிபர்கள் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கண்ணன்(29) மற்றும் வெற்றி(31) என்று தெரிய வந்தது. அவர்கள் மீது புகார் கொடுக்கப்படாததாலும், அவர்கள் எந்த தவறான நோக்கத்தோடு வராததாலும் அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

0 comments:
Post a Comment