வீரம் படத்தின் இசை இணையதளத்தில் கசிந்துள்ளது. இருப்பினும் அறிவித்தபடி இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா நடித்துள்ள வீரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை இணையதளத்தில் கசிந்துவிட்டது. இருப்பினும் அறிவித்தபடி நாளை இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இன்டர்நெட்டில் கசிந்த 'வீரம்' ஆடியோ: கலங்காத படக்குழு இது குறித்து வீரம் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிறு கசிவுகளால் சமுத்திரம் காலியாகிவிடாது. வீரம் பட பாடல்களை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் அஜீத் ரசிகர்களுக்கு சில டிராக்குகள் கசிந்தது நம்பிக்கை இழந்துவிடச் செய்யாது. அறிவித்தபடி நாளை இசை வெளியீடு நடைபெறும். நாள் காலை 8 மணி முதல் ரேடியோ மிர்ச்சியில் வீரம் படம் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இசை குறித்து படத்தின் இயக்குனர் சிவாவும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் ரேடியோவில் பேசுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment