Advertisements

‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படம் ‘நானும் ரவுடி தான்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை கௌதம் மேனன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னாள் மிஸ் உத்தரகாண்ட் அழகி லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர், சென்ற வருடம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அந்தால ராக்‌ஷசி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்! தற்போது ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வரும் லாவண்யா அடுத்து கௌதம் கார்த்திக்குடன் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.



Tags : andala rakshasi , gautham karthik, Naanum roudy thaan, poda podi director, vignesh sivan, 

0 comments:

Post a Comment

 
Top