சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக உருவான கதையில் தல அஜித் நடிக்க உள்ளாராம்.
ரஜினி ஒரு படத்தை முடித்த உடனே, அவரை வைத்து இயக்க முன்னணி இயக்குனர்கள் முற்றுகையிடுவார்கள்.
அப்படி செல்லும் அனைவரையும் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவைத்து மணிக்கணக்கில் சளைக்காமல் கதை கேட்பார் ரஜினி.
அதில் ஒன்றை செலக்ட் பண்ணி விட்டு, மற்ற இயக்குனர்களிடம் இன்னொரு முறை நாம சேர்ந்து படம் பண்ணுவோம் என்று பக்குவமாக சொல்லி விடுவார்.
இதேபோன்று தான், சிகிச்சைக்காக சென்றவர் சிங்கப்பூரில் இருந்து திரும்பி போது, கே.வி.ஆனந்த் சொன்ன கதையை கேட்டார்.
ஆனால் இதுவரையிலும் அந்த கதைக்கு எஸ் ஆர் நோ சொல்லவில்லையாம்.
இதனால் காத்துக்கிடந்த கே.வி, அஜித்தை நாடியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
வருகிற பிப்ரவரியில் கௌதம் மேனன் படத்தை முடித்த கையோடு, கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கலாம் என்றும் முணுமுணுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment